சென்னை: சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் கடுமையான வார்த்தைகளால் நடிகர்களை விமர்சித்தார். இதையடுத்து, ஏற்கனவே நடிகர்  விஜய் வரியை முழுமையாக செலுத்திய நிலையில், தற்போது நடிகர் தனுசும் காருக்கான வரியை செலுத்தி உள்ளார்.

நடிகர் தனுஷ் கடந்த 2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வரி விலக்கு அளிக்க மறுத்ததோடு 48 மணி நேரத்தில் பாக்கி தொகையான ரூ.30.30 லட்சத்தை கட்ட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தனுஷ் பணத்தை செலுத்தி விட்டதாக வணிகவரித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்யும் தனது சொகுசுக் காருக்கான நுழைவு வரியை நேற்று செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

சாதாரண மக்கள் வரிகட்டும்போது உங்களுக்கு ஏன்….? சொகுசு கார் வழக்கில் நடிகர் தனுஷ்-ஐ வெளுத்து வாங்கிய நீதிபதி….