குபேரலிங்கேஸ்வரர் திருக்கோயில், .ஐ.பி. நகர், ஆர். எம் காலனி, திண்டுக்கல்

தல சிறப்பு :
மூலவர் குபேரலிங்கேஸ்வரர் மேற்கு பார்த்து அருள்பாலிப்பது சிறப்பு. இத்தகைய மேற்கு பார்த்த சிவனை தரிசிப்பது ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பலனை தரும் என்பது சிறப்பு.
பொது தகவல் :
மேற்கு பார்த்து கோயில் அமைந்துள்ளது. மூன்று நிலை மூன்று கலசத்துடன் மேற்கு பார்த்து ராஜ கோபுரம் அமைந்துள்ளது. வள்ளி தெய்வானையுடன் முருகன், துர்க்கை, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கொடிமரம் இங்குள்ளது. பதிணென் சித்தர்கள் உருவம் கோயிலின் உப்புறம் வரையப்பட்டுள்ளது.
தலபெருமை :
கோயில் கோபுர சிறப்பு. சிவதிசையில் உள்ளது சிவன், ராமருக்கு காட்சி கொடுத்த சிற்பம் உள்ளது. ஈஸ்வர திசையில் உள்ளபடி, சனகாதிபதி முனிவர்கள் நால்வருக்கு பிரம்மத்தை போதித்த சிவன் மயூரி தாண்டவர் (சிவன் சக்தி) அதிகார நந்தி மத்தளம் அடிக்கும் காட்சி இங்கு காணலாம்.
பிரார்த்தனை :
வேலை வாய்ப்பு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், சகல சவுபாக்கியங்கள் பெறவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
எட்டு ஆண்டுகளாக திண்டுக்கல் ஆர்.எம். காலனி பக்தர்கள் வழிபடும் கோயில்களுள் ஒன்று. இங்குள்ள சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் முன், திண்டுக்கல்லில் வெள்ளம் ஒன்று வந்து வெள்ள நீரில் 48 மணிநேரம் சுவாமி நீரில் இருந்தார். இக்கோயிலில் மவுனத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். இறைவனிடம் மன தூய்மையுடன் தங்களது குறைகளை பக்தர்கள்கூறி சிறந்த பலனடைந்ததாக கூறுகின்றனர்.
திருவிழா :
மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மாத பவுர்ணமி, பிரதோஷம்.
இருப்பிடம் :
திண்டுக்கல்லில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் வழியில் 2 கி.மீ துöரத்தில் உள்ள எம்.வி. எம் கல்லூரி அருகே உள்ள ஆர்.எம். காலனியில் கோயில் உள்ளது.
பிரார்த்தனை :
வேலை வாய்ப்பு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கவும், சகல சவுபாக்கியங்கள் பெறவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.