சென்னை:
கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி குடும்பத்தினர் தீ க்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக கார்டூனிஸ்ட் பாலா ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்.
இதற்காக நெல்லை போலீசார் அவரை கைது செய்தனர். இதை கண்டிக்கும் வகையில் சென்னை பத்திரி க்கையாளர் மன்றம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மன்ற அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாலா வெளியிட்ட கார்ட்டூனை பெரிய அளவில் பேனராக தயாரித்து தொங்கவிட்டு அதன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Patrikai.com official YouTube Channel