புதுடெல்லி: பட்ஜெட்டுக்குப் பிந்தைய நிகழ்வாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விருந்தை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளதானது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

பொதுவாக, பட்ஜெட்டுக்கு பிந்தைய நிகழ்வாக, முக்கியப் பத்திரிகையாளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் விருந்து அளிப்பது வழக்கம். நிர்மலா சீதாராமனும் அந்த விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால், அந்த விருந்தில் 7 முதல் 8 நிருபர்களும், 16 எடிட்டர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து 2 நிருபர்கள், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸில் இருந்து 2 நிருபர்கள், பிடிஐ நிறுவனத்திலிருந்து 2 நிருபர்கள், ஏஎன்ஐ நிறுவனத்திலிருந்து 1 நிருபர் என 7 நிருபர்களும், 16 எடிட்டர்களுமே கலந்து கொண்டனர்.

சமீபத்தில், நார்த் பிளாக் பகுதியிலுள்ள நிதி அமைச்சக வளாகத்தில், அங்கீகாரம் மற்றும் அதிகாரிகளின் முன் அனுமதி பெற்ற பத்திரிகையாளர்கள் மட்டுமே பிரவேசிக்க முடியும் என்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பத்திரிகையாளர் இந்த எதிர்பாராத புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.