சென்னை:
பத்திரிகையாளர் ஓய்வூதியம் – ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கையில், கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு பத்திரிகையாளர் ஓய்வூதியம் மாதம் ரூ.10,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.