கரூர்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நிகழும்போதெல்லாம், வாக்குகள் தாமரை சின்னத்திற்கே விழுவது எப்படி? என்று கேள்வியெழுப்பியுள்ளார் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி.

வாக்குப்பதிவு இயந்திரங்களில், கோளாறு நிகழும் சமயங்களில், வாக்குகள் தவறியும்கூட, எதிர்க்கட்சிகளின் சின்னங்களுக்கு விழுவதில்லையே? அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிகழ்கிறது. அதற்கு என்ன காரணம்? என்றுள்ளார் அவர்.

‍நேற்று, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சில தொகுதிகளில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், வேறு சின்னங்களுக்கு போடப்பட்ட வாக்குகள், தாமரை மற்றும் இரட்டை இலைக்கு விழுந்ததாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், இதுபோன்ற புகார்கள் வேறு மாநிலங்களிலும் அடிக்கடி எழுவதுதான்.

இந்நிலையில்தான், இப்படியான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் ஜோதிமணி. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்துவதை ரத்துசெய்துவிட்டு, பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டுமென்ற குரல்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

[youtube-feed feed=1]