“குக்கூ” பட இயக்குநர் ராஜூமுருகனின் இரண்டாவது படைப்பான, “ஜோக்கர்” நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) வெளியானது.
நாட்டின் தற்போதைய நிலையை எள்ளளுடன் விவரிக்கும் இந்தத் திரைப்படம் பலரையும் கவர்ந்திருக்கிறது. “ஆபாசம், அதிரடி சண்டை இல்லாத.. இயல்பான… மக்களுக்கான படம்” என்று நெட்டிசன்கள் கொண்டாடுகிறார்கள்.    வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர் என சமூகவலைதளங்களில் இந்த படத்தை வரவேற்று, பாராட்டித்தள்ளிவிட்டார்கள்.. ஊஹூம்.. தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்!
அவற்றில் சில..
 

கம்பீரம்

3

ஜோக்கர் ராக்ஸ்

5

பூச்செண்டு

6

மகிழ்ச்சி

7

தைரியம்

8

சனநாயக கடமை

9

அரசியல் அழைப்பு 

10

அற்புத படைப்பு

11

ஜோக்கர் படம், (கார்பரேட்) தியேட்டர் குறித்த சிந்தனையையும் கிளறிவிட்டிருக்கிறது.. இதற்கு உதாரணம்…
4
 
எந்த அளவுக்கு “ஜோக்கர்” திரைப்படம், வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்த பதிவு...

1

மொத்தத்தில் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது “ஜோக்கர்”. சமீபத்தில், “கபாலி”, “அப்பா” திரைப்படங்களைப் பற்றி நிறைய கருத்துக்களை பகிர்ந்தார்கள் நெட்டிசன்கள். கபாலி  குறித்து இரு வேறுவிதமான கருத்துக்கள் இருந்தன. ஆனால் “அப்பா” படத்தைப்போல, இந்த “ஜோக்கர்” படத்துக்கும் பாராட்டுக்கள் மட்டுமே குவிந்துவருகின்றன  என்பது குறிப்பிடத்தக்கது.