சென்னை:   தயவுசெய்து அமைச்சரவைக்குள் வாருங்கள், புதிய சகாப்தத்தில் இணையுங்கள் என  விசிக தலைவர் திருமாவளவனுக்கு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் 2 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள  சென்னை வந்துள்ள  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

இன்றைய தினம் உணர்ச்சிமிகுந்த தருணமாக உள்ளது. . தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுகிறது” குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் கூறியவர்,  “தவெக அமைச்சரவையில் நாங்கள் எந்த துறைகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என நிர்பந்திக்கவில்லை. முதலமைச்சர் விஜய்யிடம் அந்த முடிவை விட்டுவிட்டோம் என்றவர், தமிழ்நாடு அரசியல் கள நிலவரத்தை,  தேசிய தலைவர்  மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தொடர்ந்து  கவனித்து வருகின்றன்ர், அவர்கள் தமிழ்நாடு, கேரளம் அ மக்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்கள்” என்று பதிலளித்தார்.

இதையடுத்து தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறவில்லையே என்ற கேள்விக்கு,  , “வி.சி.க அமைச்சரவையில் வர வேண்டுமா என்பது அவர்களது முடிவு நாம் எந்த அழுத்தமும் கொடுக்கக்கூடாது. எந்த அதிகாரமும் இல்லாமல் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தமிழக வெற்றிக் கழகம் கட்சி வெகு நாள்களுக்கு முன்பே கூட்டணி அரசாங்கத்தை அறிவித்துவிட்டார்கள். மக்களும் அவர்களுக்கு வாக்களித்து உள்ளனர்.

நாம் அனைவரும் அந்த அரசாங்கத்தில் இணைந்து முழுமையான கூட்டணியை ஆட்சியை மக்களுக்கு தருவோம். வி.சி.க, இடதுசாரி கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் தயவுசெய்து உள்ளே வாருங்கள். கூட்டணி ஆட்சியின் புதிய சகாப்தத்தில் இணையுங்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினமான மே 21-இல் தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்றதற்கு, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகம் முக்கியமானது. உணர்ச்சி மிகுந்த தருணமாக உள்ளது.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளும், அதே நாளில் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெறுவதும் ஒன்றாக ஒரே நாளில், எதார்த்தமாக அமைந்ததுள்ளது. இந்த வெற்றியை நாங்கள் அவருக்கு இதனை சமர்பிக்கிறோம்” என்றார் கிரிஷ் சோடங்கர்.

முடிவாக, அதிமுக கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், த.வெ.க அமைச்சரவையில் இடம் பெற்றால் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்று வினவியதற்கு, மதச்சார்பற்ற கட்சிகளே இந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்பி த.வெ.க-வை ஆட்சியில் அமர வைத்துள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]