சென்னை: கடந்த திமுக ஆட்சியில், சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த அருண்,  குண்டர் சட்டம் தொடர்பான வழக்கில் ஆஜராக நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரபல  யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சவுக்கு சங்கரை உடனடியாக  விடுவிக்கவும்  நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம், ஆட்சி குறித்து குறை கூறுபவர்களை, இரவோடு இரவாக கைது செய்து வந்தது காவல்துறை. மேலும் பலர் காவல்துறையினரால் மிரட்டப்பட்டனர். அதையும் மீறி திமுக அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வந்த பந்த யுயூபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஏராளமான வழக்குகளை போட்டு, அவரை பல வழக்குகளில் குண்டர் சட்டத்தில் அடுத்தடுத்து  கைது செய்ததுடன், அவரை பெண் போலீசாரை கொண்டு தாக்கியும், அவரது  தாயார் வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் மலம் கலந்த தண்ணீரை ஊற்றி அசிங்கப்படுத்தியபோது பல்வேறு அராஜகங்களும், அவலங்களும் அரங்கேறின. பல்வேறு வழக்குகளில் ஜாமீனில் பல முறை அவா் வெளியே வந்தாா். ஆனால், அவர் வெளியே வந்ததும் மீண்டும் மற்றொரு வழக்கில் அவரை கைது செய்வதும் வாடிக்கையாக தொடர்ந்தது. இதற்கிடையில், பழைக குண்டர்சட்டம் வழக்கை  நீதிமன்றம் ரத்து செய்த நிலையில்,  கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி (திமுக ஆட்சி) மீண்டும்  சவுக்கு சங்கா் மீது குண்டா் சட்டம் போடப்பட்டது.

இதுபோனற்  திமுகஅரசின் நடவடிக்கைகள், திமுக அரசு மீதான மதிப்பை மக்களிடையே குறைத்து வந்தது. ஆனால், ஆட்சியாளர்கள் விளம்பர மோகத்தில் இருந்து வந்ததால் மக்களின் மனநிலை புரியாமல்,  மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு  வருவோம் என இருமாப்பாக இருந்தனர். ஆனால், மக்கள் திமுகவுக்கு சம்மட்டடி அடி அடித்து தோல்வியை கொடுத்ததுடன், முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினையும் தோற்கடித்து பாடம் புகட்டி உள்ளனர்.

இந்த நிலையில், மே 10ந்தேதி விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. இதையடுத்து,  காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கும் பச்சைக்கொடி காட்டி உள்ளது. அதன் தொடர்ச்சியாக யுடியூபர் சவுக்கு சங்கா் மீதான குண்டா் சட்டத்தை  மே 20ந்தேதி ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில்,‘சவுக்கு சங்கா் குண்டா் சட்டத்தில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமா்ப்பிக்கப்பட்டன.

இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்று அறிவித்தது. அதன்படி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது. வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் அவா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தாலோ தவிர, போதுமான காரணங்கள் இல்லாததால் தடுப்புக் காவலில் இருந்து அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையில் சவுக்கு சங்கர் மீதான மூன்று வழக்குகளில் அவர்மீது குண்டர் சட்டம் பாய்ச்சிய அப்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் தொடர்பான இரண்டு முக்கிய வழக்குகளில் நேற்று  (மே 20, 2026) சென்னை உயர்நீதிமன்றம்  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒரு வழக்கில், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ. அருணை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மற்றொரு வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரின் மனு –

முன்னாள் காவல்ஆணையர் அருண் மீதான குற்றச்சாட்டு: 

 ரியல் எஸ்டேட் டெவலப்பர் மீது குண்டர் சட்டம் 

தேமுதீக மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் மற்றும் அவரது மனைவி எஸ். பூர்ணஜோதி ஆகியோருக்கும், ரியல் எஸ்டேட் டெவலப்பர் சந்தோஷ் சர்மாவுக்கும் இடையே நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் (apartments) தொடர்பாக ஏற்பட்ட வணிக மோதலே இந்த வழக்கின் ஆதாரமாகும்.

ந்தோஷ் சர்மா மீது, ரூ.42.94 கோடி மதிப்பிலான 48 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக பூர்ணஜோதி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அப்போதைய பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ. அருண், கடந்த செப்டம்பர் 22, 2025 அன்று, சந்தோஷ் சர்மாவை ‘குண்டா’ (Goonda) என அறிவித்து தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்திய நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன், “இந்த உத்தரவு எங்கள் மனசாட்சியை அதிர்ச்சியடைய வைக்கிறது” (The order shocks our conscience) என்று கடுமையாகக் கண்டித்தனர்.

வெறும் வணிக மோதல் (commercial dispute) ஒன்றிற்காக ஒரு நபரை ‘குண்டா’ என அடையாளம் காண்பது எவ்வாறு பொது ஒழுங்கை (public order) பாதிக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “ஒரு டெவலப்பருக்கும், நில உரிமையாளர்களுக்கும், வீடு வாங்குபவர்களுக்கும் இடையே உள்ள தகராறு, எப்படி பொது ஒழுங்கைப் பாதிக்கும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கில், குண்டர் சட்ட உத்தரவைப் பிறப்பித்த முன்னாள் காவல் ஆணையர் ஏ. அருணை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அவர் மே 27, 2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்க வேண்டும். டெவலப்பரின் மகள் வர்ஷா சர்மா தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவின் மீதான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

: சவுக்கு சங்கர் வழக்கு

குண்டர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் (அ) ஏ. சங்கரின் மருமகன் டி. பாரத் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது  அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் பொதுச் சென்னை அரசு வழக்கறிஞர் (Additional Public Prosecutor – APP) முனியப்பராஜ், புதிய பொதுச் சென்னை அரசு வழக்கறிஞர் (Public Prosecutor) இந்த வழக்கில் வாதிட விரும்புவதாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு நேரம் ஒதுக்குமாறு கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளை (மே 21, 2026) ஒத்திவைத்து உத்தரவிட்டனர். எனவே, சவுக்கு சங்கர் வழக்கின் மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசே குண்டர் சட்டத்தை ரத்து செய்திருந்தாலும், நீதிமன்ற விசாரணை தொடர்வது, சட்டப்பூர்வ முறையான விடுதலைக்கான நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை என்பதைக் காட்டுகிறது.

[youtube-feed feed=1]