டில்லி

ராஜஸ்தான் மாநில அரசு நடத்திய தரச் சோதனையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பு தோல்வி அடைந்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரு புகழ்பெற்ற மருந்து பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் குழந்தைகள் பராமரிப்புப் பொருட்கள் இந்தியாவில் பெருமளவில் விற்பனை ஆகிறது. பிறந்த குழந்தைகளுக்கு பரிசளிக்க இந்த நிறுவனத்தின் குழந்தைகள் சோப், பவுடர், ஷாம்பூ, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ஒரு பாக்கிங்காக அளிக்கப்படுகிறது.

கடந்த வருடம் இந்த நிறுவனத்தின் குழந்தைகள் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் கலந்துள்ளதக புகார்கள் எழுந்தன. ஆஸ்பெஸ்டாச் மூலம் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஜான்சன் குழந்தைகள் பவுடர் அரசால் சோதனை செய்யப்பட்டது. அப்போது இந்த பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் இல்லை என கண்டறியப்பட்டது. ஆயினும்

இந்த நிறுவனத்தின்  தற்போது மற்றொரு குழந்தைகள் பராமரிப்பு பொருளான ஷாம்பு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு பரிசோதனை கூடத்தில் நடந்த சோதனையில் இந்த ஷாம்புவில் கேடு உண்டாக்கும் பொருட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுளது. அவை என்ன பொருட்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஆயினும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன செய்தி தொடர்பு பெண் அதிகாரி இந்த ஷாம்பூவில் ஃபார்மல்டிஹைட் உள்ளதாக சோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக கூறி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் அதிகாரி, “எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் எங்கள் குழந்தைகள் ஷாம்புவில் கேடு உண்டாக்கும் பொருட்கள் உள்ளதாகவும் அவை ஃபார்மல்டிஹைட் ஆக இருக்கலாம் எனவும் காணப்படுகிறது. நாங்கள் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறோம். உலகில் உள்ள அனைத்து குழந்தை பராமரிப்பு பொருட்களில் எங்கள் தயாரிப்பு மிகவும் பாதுகாப்பானதாகும்” என தெரிவித்துள்ளார்.

ஃபார்மல்டிஹைட் என்பது கட்டுமான பொருட்களில் கலக்கப்படும் ஒரு ரசாயனம் ஆகும்.