வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக  வரும் 20ந்தேதி பதவி ஏற்க உள்ள ஜோபைடன், கொரோனா தடுப்பூசின் 2வது டோஸ் எடுத்துக்கொண்டார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.  தொற்று பாதிப்பு காரணமாக உலகம் சுமார் 375,000 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்,  ஒவ்வொரு நாளும் 3,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தொற்று பரவலை தடுக்கும் வகையில், பல நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன.
அதன்படி அமெரிக்காவில், பைசர் நிறுவனத்தில் தடுப்பூசிகள் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன்.   பதவியேற்றதும் முதல் 100 நாளில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொரோனா தடுப்பூசியான பைசர் மருந்தின் முதல் டோஸை, நேரலையில் மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடன் போட்டுக்கொண்டார். இந்த நிலையில், தற்போது 2வது டோஸையும் அவர் எடுத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், ‘மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க செய்வது தான் தனது முக்கிய பணி’ என கூறினார்.