ஜோத்பூர்:

மான் வேட்டையாடி வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருடன் வேட்டைக்கு சென்ற சோனாலி பிந்த்ரே, தபு உள்ளிட்டோரை விடுவித்து உள்ளது

1998-ம் ஆண்டு  ராஜஸ்தான் மாநிலத்தில் படிப்பிடிப்பின் இடைவேளையின் போது, அந்த பகுதியில் உள்ள காட்டுக்கு சென்று, தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ இன கருப்பு மானை வேட்டையாடியதாக பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த  வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சல்மான் கான் மான் வேட்டை ஆடியதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இநத வழக்கு மீண்டும் நடைபெற்று வந்த நிலையில் இன்று சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதி மன்றம் கூறி உள்ளது.

தண்டனை விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்ததையொட்டி சல்மான்கான் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.