ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில், பிரசவ வலி காரணமாக கர்ப்பிணி சகோதரியை காரில் அழைத்துச் சென்ற நபரின் கார் பழுதாகி நடு வழியில் நின்ற நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காரிலேயே பிரசவம் பார்த்தனர்.
அந்த குழந்தையைப் பெற்றெடுந்த அந்த இளந்தாய், தனது குழந்தைக்கு, பிரசவத்திற்கு உதவிய போலீஸ் அதிகாரியின் பெயரான பிரீத்தி சந்திரா என்ற பெயரை தனது குழந்தைக்கு சூட்டி நன்றி தெரிவித்தார்.
சம்பவத்தன்று ராஜஸ்தான் பார்மர் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி இளம்பெண் ஒருவருக்கு பிரசவலி ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையிலும், இளம்பெண்ணின் சகோதரர் தனது காரில், கர்ப்பிணியான சகோதரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார். இடையிடையே காரை மடக்கிய காவல்துறையினரிடம் பிரசவம் என்பதை சுட்டிக்காட்டி, ஜோத்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பாதி வழியிலேயே திடீரென கார் பழுதாகி நின்றுவிட்டது. அந்த சமயத்தில் இளம்பெண்ணிசக்கு பிரசவ வலி அதிகமாக, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் துணை கமிஷனர் பிரீத்தி சந்திரா என்பவர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க துணிந்தார்.
சக பெண் காவலர்கள் துணையுடன், அந்த பகுதியில் கிடைத்த பந்தல் துணியைக்கொண்டு, காரைச்சுற்றி நான்கு புறமும் ஆண் காவலர்கள் பிடித்தபடி மறைத்துக்கொள்ள, அடுத்த சில நிமிடங்களிலேயே காரிலேயே சுக பிரசவமாக அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையில் பெண் மருத்துவர்களும் சம்பவ இடத்துக்கு, தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கும், தனது குழந்தைக்கும் ஈடு செய்ய முடியாத உதவியை செய்த பெண் போலீஸ் அதிகாரிக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில், அந்த போலீஸ் துணை கமிஷனர் பெயரான பிரீத்தி சந்திரா என்ற பெயரையே தனது குழந்தைக்கு சூட்டியுள்ளார்.
இந்த சம்பவம் மே 5ந்தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போதுதான் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.