
சென்னை: நீதிபதிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கும் வகையில், ‘வசிப்பிட உதவியாளர்’ என்ற பெயரில் புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் 180 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களின் இல்லங்களில் சமையல், சுத்தம் செய்தல் மற்றும் இதர வேலைகளை செய்வதற்காக இந்தப் புதிய பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த தொற்று வியாதியும் இல்லாதவராக இருத்தல் அவசியம். தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை கிளைகளுக்கிடையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கான ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை. குறைந்தபட்ச வயது வரம்பு 18 மற்றும் பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 30.
[youtube-feed feed=1]