சென்னை: வெளிநாடுகளில் நர்ஸ், டிரைவர், சமையல்காரர், டிப்ளமோ பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான ஓஎம்சி மேன் பவர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து ஓஎம்சி மேன் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் மகேஸ்வரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதில், வெளிநாடுகளில் நர்ஸ்,டிரைவர், சமையல்கார்ர், டிப்ளமோ பட்டதாரி பணியாற்ற http://omcmanpower.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்திற்கு 044-22505886 /044-22502267 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பணிக்கு ஏற்றவாறு சம்பளம் குறைந்த பட்சம் 30ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும், பணியிர் சேருபவர்களுக்கு உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.