அதிர்ச்சி அறிக்கை : இந்தியாவில் அதிகரித்து வரும் வேலை இழப்பு…

டில்லி

ந்திய பொருளாதார மையம் சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை வேலை இழப்பு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்திய பொருளாதார மையத்தின் வேலைவாய்ப்பு பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் காணப்படுவதாவது :

சமீப காலமாக வேலை இழப்பு என்பது பல துறைகளிலும் அதிகரித்து வருகிறது.  பா ஜ க அரசு பதவியேற்கும் போது ஐந்தாண்டுகளில் சுமார் 2 கோடி புது வேலைவாய்ப்புக்கள் உண்டாக்கப்படும் என தெரிவித்திருந்தது.   ஆனால் நிஜத்தில் வேலைவாய்ப்புக்கள் விவசாயம், கட்டுமானம் போன்ற இடங்களில் கூலித் தொழிலாளர்களுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது.  மற்ற துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்பும் குறைந்து பலர் வேலை இழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை 40.47 கோடி வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகும் என கணக்கிடப்பட்டிருந்தது.   ஆனால் அதில் 21% மட்டுமே வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் 8.6 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.  இது அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய கணக்கெடுப்பு ஆகும்.

இது போன்ற வேலை இழப்புகள் ஊழியர்களை தங்கள் தகுதிக்கு குறைவான வேலைகளை தேர்ந்தெடுக்க வைக்கின்றது.  வெகு காலம் வேலையின்றி இருப்பதை விட கிடைத்த வேலை பரவாயில்லை என்னும் எண்ணத்தை தோற்றுவிக்கிறது.  இதனால் அவர்களால் முழு மனதுடன் தங்கள் பணியில் ஈடுபட முடியாமல் போய் அவர்களின் முழுத்திறமையும் வெளிப்படுவதில்லை.

ஆளும் பா ஜ க அரசு தற்போது வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் பசுவதை தடை, இந்துத்வா போன்ற விஷயங்களை மட்டுமே கவனித்து வருகிறது என பல வேலை இழந்தோர் தெரிவிக்கின்றனர்.  சென்ற வருடம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்கு மாதத்தை விட தற்போதைய ஜனவ்ரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் சுமார் 15.3 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.  இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை இந்த அரசு செய்ததக தெரியவில்லை எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Job losses are increased between january 2017 and April 2017