டெல்லி:
விடுதியில் தங்கி படித்துவரும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லுங்கள் என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. 4வது கட்டமாக மே 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சென்னை, டெல்லி உள்பட பல மாநிலங்கள் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க மேலும் கால தாமதம் ஆகலாம் என்று கூறப்படு கிறது. இதையடுத்து,  விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் சொந்த ஊருக்கு செல்லுங்கள், பல்கலைக்கழகம் திறந்ததும்  வந்தால் போதும் என்று  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.  இது மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் உள்பட பல பயணிகள் ரயில்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், மாணவர்களை விடுதிகளை காலிசெய்துவிட்டு செல்லுமாறு பணிக்கப்பட்டு உள்ளது.