டில்லி

மாணவர் தலைவர் கன்னையா குமார் இன்று டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற நேர்காணல் முடித்துள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பேகுசராய் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர் கன்னையா குமார். இவர் பள்ளிப் பருவத்தில் இருந்தே இடது சாரி இயக்கங்களில் ஆர்வமுடன் இருந்தார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆப்பிரிக்கர்கள் குறித்த ஆய்வுப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக்த்தில் சேர்ந்தார். அங்கு 2015 ஆம் ஆண்டு அவர் மாணவர் சங்க தலைவரானார்.

பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அஃப்சல் குரு 2013ல் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் அஃப்சல் குருவை தூக்கிலிட்டதை எதிர்த்து உரையாற்றியதாகவும், நாட்டுக்கு எதிரான கோஷங்களை முழங்கியதாகவும் கன்னையா குமார் மீது புகார் எழுந்தது. அதை ஒட்டி இவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு பதியப்பட்டது. அது தவறானது என பல ஊடகங்கள் பிறகு செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில் கன்னையா குமார் தனது முனைவர் படிப்புக்கான நேர்காணல் தேர்வில் இன்று பங்கு பெற்றுள்ளார். இது குறித்து தனது டிவிட்டரில், “இன்று எனது பி எச் டிக்கான ஆய்வுகளை நேர்காணல் குழுவுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளேன். எனது போராட்டத்தி எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.