புல்வாமா, காஷ்மீர்

காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் நடத்திய தாக்குதல் குறித்த முழு விவரம் இதோ

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தியதால் சுமார் 20 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணமடைண்டதாக செய்திகள் வெளியாகின. தற்கொலைப்படை வீரர் தலைமையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்கள் வந்துள்ளன.

சிஆர்பிஎஃப் (மத்திய ரிசர்வ் காவல் படை) வீரர்கள் 2547 பேர் 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் சென்றுக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் மாலை 3.15 மணிக்கு ஸ்ரீநகருக்கு 30 கிமீ தூரத்தில் உள்ள லத்போரா என்னும் இடத்தில் வந்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தற்கொலைப் படை தீவிரவாதி ஓட்டி வந்த வாகனம் அந்த வாகனங்களில் வேகமாக மோதி உள்ளது.

தற்கொலைப்படை வீரர் வந்த அந்த வாகனத்தில் சுமார் 100 கிலோ எடையுள்ள வெடி மருந்துகள் உள்ளன. இதனால் வாகனம் வெடித்து மோதிய வாகனங்களும் வெடித்து சிதறி உள்ளன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 30 பேர் மரணம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய்ஷ் ஈ முகமது பயங்கர வாத இயக்கம் தற்கொலைப் படை வீரர் அதில் அகமது தார் தாக்குதலுக்கு முன்பு பேசிய வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதுவரை நடந்த தீவிரவாத தாக்குதலில் இது மிகவும் பயங்கரமானது என கூறப்படுகிறது.