ஸ்ரீநகர்:

காஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உள்பட பல்வேறு தடை உத்தரவுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக மாநில கவர்னர் அறிவித்து உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 31ந்தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டது.  பல ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த அரசியல் சாசனம் பிரிவு 370, 35ஏ ரத்து செய்து, அரசியலமைப்பில் 370-வது பிரிவையும் திரும்பப் பெற்றது.  மத்திய அரசின் இந்த தீர்மானம் மற்றும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கிய நிலையில், இது தொடர்பான அரசாணை மத்திய அரசின அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் ஆகிய பகுதிகளைப் பிரித்து இரு பகுதிகளையும் யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப் பட்ட நிலையில், மறுசீரமைப்பு தொடர்பான மசோதாவும் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.  இதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வந்தது. தற்போது,  அங்கு ஓரளவு பதற்றம் தணிந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், இன்று முதல் அனைத்து உத்தரவுகளும் வாபஸ் ஆவதாக  மாநில கவர்னர் சத்திய மாலிக் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும்,  அமர்நாத் யாத்ரீகர்கள் உடனே வெளியேற வும், ஆகஸ்டு 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது.  தொடர்ந்து அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இந்த நிலையில் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் கடந்த மாதம் (செப்டம்பர்) 26ந்தேதி மீண்டும் காஷ்மீர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டார்.  இதைத்தொடர்ந்து கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு கவர்னர் சத்யபால் மாலிக் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார். அதை ஆய்வு செய்த, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில்,  ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரு முடிவாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பபிக்கப்பட்ட அனைத்து உத்தரவு திரும்ப பெற முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து தடை உத்தரவுகளும் வாபஸ் பெறுவதாக கவர்னர் மாலிக் அறிவித்து உள்ளார்.  இந்த உத்தரவு அக்டோபர்  இன்று ( 10-ம் தேதி)  முதல்  அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 மாதத்திற்கு பிறகு தற்போது தடை உத்தரவுகள் விலக்கப்பட்டு உள்ளதால், அங்கு இயல்பு வாழ்க்கை சூழல் மேலோங்கும் என்றும்,. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.