சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக  மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க உத்தவிட்ட நீதிமன்றம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஜிப்மர் மருத்துவர்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பான உடற்கூறாய்வின்போது, தனது தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்த நிலையில், நேற்று 2வது முறையாக மாணவியின் உடல் நீதிமன்ற அறிவுரைப்படி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதற் கிடையில், மாணவியின் தந்தையார் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, அரசு சார்பில், மாணவியின் 2-வது பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை  என்று தடயவியல் நிபுணர் கொடுத்த அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும்,  மாணவியின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதில்  ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை சரிபார்த்துக் கொள்ளலாம்  என்றும், அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவி தரப்பு வழக்கறிஞர், பிரேத பரிசோதனை திரிக்கப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் பிரச்சினையை ஏற்படுத்துகிறீர்கள் என கடிந்துகொண்டதுடன,  அமைதியாக தீர்வு காண வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாணவியின் உடலை பெற்றுக்கொள்வது தொடர்பாக  மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க  பெற்றோருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்,  மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்று கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், மாணவியின் மறு பிரேத பரிசோதனை அறிக்கையை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்காக தகுதியான தடயவியல் நிபுணர்களை  3 பேர் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு  நியமனன்ம செய்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும், ஆய்வறிக்கை ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த விவகாரத்தின்போத ஏற்பட்ட வன்முறையால், பாதிப்புக்குள்ளான  மாணவர்களை பற்றி எவரும் பேசவில்லை என்று கடிந்து கொண்டதுடன்,  மாணவர்களின் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அப்போத குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், மாணவர்களின் கல்வியை மீட்டெடுப்பது குறித்து முதல்வர் ஆலோசித்துள்ளார் என  தெரிவித்தார்.