சென்னை

மிழகம் முழுவதும் நேற்று ஜியோ சேவைகளில் சிக்கல் ஏற்பட்டு அது இன்றும் சில இடங்களில் தொடர்கிறது.

கடந்த சில தினங்களாகசே ஏர்செல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.    ஏர்செல் நிறுவனம் இந்தப் பின்னடைவு விரைவில் சரியாகும் என அறிவித்த போதிலும் அது சரியாக வில்லை.   இந்நிலையில் ஏர்செல் நிறுவனம் திவால் ஆகப் போவதாக அறிவித்தது.   மேலும் வாடிக்கையாளர்களை வேறு சேவைக்கு மாற்றிக் கொள்ளச் சொல்லி குறும் தகவல் அனுப்பி வருகிறது.

நேற்று முதல் ஜியோ சேவையில் கடும் பாதிப்பு உண்டாகி உள்ளது.   இணைய தள சேவைகள் ஓரளவு இயங்கிய போதிலும் அழைப்புகள் அடியோடு நின்று போனது.   இது குறித்து வலை தளங்களில் செய்திகள் வைரலாகின.     இதற்கு ஜியோ நிறுவனம், “வெகு சில இடங்களில் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.  விரைவில் அவை சரி செய்யப்படும்” என டிவிட்டரில் அறிவித்தது.   இருப்பினும்  இன்றும் பல இடங்களில் ஜியோவின் தொடர்பு சிக்கலில் உள்ளது.

தற்போது ஏர்செல் நிறுவனத்தில் இருந்து சிலர் ஜியோவை தேர்ந்தெடுத்துள்ளனர்.   இந்நிலையில் ஜியோவிலும் சிக்கல்கள் நீடிப்பதால் மொபைல் உபயோகிக்கும் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.