ஜியோ 4ஜி மொபைல் போன் முன்பதிவு செய்வது எப்படி?

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி மொபைலுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது.

இந்த மொபைலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளிலும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி மும்பையில் நடைபெற்ற  ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ஜியோ புதிய 4ஜி மொபைல் போன் வெளியிட இருப்பதாகவும், இந்த போனை பதிவு செய்யும் போது ரூ.500 செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள  ரூபாய் 1000, போன் டெலிவரி செய்யும்போது செலுத்த வேண்டும் என்றும், இந்த 1500 ரூபாய்  3 வருத்திற்கு பிறகு  திருப்பி தரப்படும் என்றும் அறிவித்தார்.

இதற்கான முன்பதிவு ஆகஸ்டு 15ந்தேதி தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால், அன்று வெளியிடப்பட முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆகஸ்டு 24ந்தேதி முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து இன்று மாலை  ஜியோவின் 4ஜி போனை இணையதளம் வாயிலாக பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வாசகர்கள் எளிதில் பதிவு செய்யும் வகையில், எப்படி பதிவு செய்வது என்பது குறித்து பத்திரிகை.காம் விளக்குகிறது.

ஆன்லைன்

இணையதளத்தில் இந்த 4ஜி மொபைலை முன்பதிவு  செய்ய இரண்டு வழிகள் உண்டு.

‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ https://www.jio.com/en-in/book-jio-phone  இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், அல்லது மற்றொரு வழியான My jio மொபைல் ஆப்  அப்ளிகேசன் வழியாகவும் பதிவு செய்ய முடியும்.

ஆஃப்லைன்

ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலமாகவும் இந்த இலவச ஜியோ 4ஜி மொபைலை புக் செய்து கொள்ளலாம்.

இலவச ஜியோ 4ஜி மொபைலை முன்பதிவு செய்வதற்கு ரூ. 500 முன்பணமாக செலுத்தவேண்டும், மீதமுள்ள ரூ.1000ஐ போன் டெலிவரி செய்யும்போது செலுத்த வேண்டும்.

இந்த பணம் நமது பெயரில் வைப்புத்தொகையாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் போனுடன், ரூபாய் 153க்கான ரீசார்ஜூம் கிடைக்கிறது. இதில் அன்லிமிடட் கால்கள், மெசேஜிங், 4ஜி டேட்டாவையும் தருகிறது.

இத்துடன், புதியதாக ரூ.54 மற்றும்  ரூ.24க்கு என  இரண்டு ரீசார்ஜ் பேக்குகளையும் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி 54 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 7 நாட்களுக்கும், 24 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து இரண்டு நாட்களுக்கும் இலவச தொலைத்தொடர்ப்பு சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு ஜியோ நிர்வாகம்  தெரிவித்துள்ளது.