ராஞ்சி: 
கொரோ தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதி பாகுபாடு இருந்து வருவது வருத்தமளிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம்  ஜார்கண்டில் நடந்துள்ளது.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் இருந்து சமீபத்தில் வெளியான செய்தியில்,  தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த  ஐந்து பிராமணர்கள், பிற்படுத்தப்பட்டோர், சமைத்த உணவை சாப்பிட  மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம், ஹசாரிபாக்கின் பிஷ்னுகார் தொகுதியில் உள்ள அரசால் நடத்தப்படும் பனாசோ தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்தது.  அந்த மையத்தில்  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த  சுமார் 100 பேர்  மேற்பட்ட கொரோனா நோயளிகள், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிராமணர்கள் ஐந்து பேருக்கும்  ரேஷன் கிட்களை  வழங்கப்பட்டது

தனிமைப்படுத்தல் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து  உள்ளூர்  கிராமத் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள  ஐந்து பேருக்கும்,  மாவட்ட அதிகாரிகளால் ரேஷன் கிட் வழங்கப்பட்டன.  மேலும் அவர்களுக்காக, தனியாக  சமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதை   ஹராசிபாக் துணை ஆணையர் புவனேஷ் பிரதாப் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். பிராமணர்கள் 5 பேரும் இது போன்ற  பிரச்சினையை எழுப்பியிருக்கக் கூடாது என்றும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத மற்றும் சாதி உறவுகளுக்கு அவர்கள் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தங்களுக்கு சமைக்க தனியாக ஒரு  நபரை நியமிக்க வேண்டும் என்று தனிமைப் படுத்தல் மையத்தில் இருந்த மக்கள் கேட்டு கொண்டதை அடுத்து, பார்வார் இட்கா பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த பள்ளியில் சொந்த ஊருக்கும் திரும்பும் புலம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப் படுள்ளதால், கொரோனா நோய் பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப் பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவம்

கடந்த வாரம் வெளியான மற்றொரு சம்பவத்தில், நைனிடாலில் உள்ள ஒரு தனிமைப் படுத்தப்பட்ட மையத்தில் 23 வயது இளைஞன், பிற்படுத்தப்பட்டோர் சமைத்த உணவை சாப்பிட மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த இளைஞர் தன் வீட்டில் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட விரும்புவதாக கூறியதாகவும் தெரிய வந்துள்ளது  ஆரம்பத்தில், பிற்படுத்தப்பட்ட சமையல்காரர் தனக்கு எதிரான சாதி பாகுபாட்டை உணரவில்லை.  இருப்பினும், இளைஞர்கள், தான் தொட்ட தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது அந்த சமையல்காரர், அவர்கள் தீண்டாமையை அறிந்து கொண்டார். இந்த சம்பவத்தை அறிந்த கிராமத் தலைவர் குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் பதிவு செய்துள்ளார்.