மத்திய பிரதேசம்: 

த்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக  COVID19India.org  இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குரிய மூன்று மாநிலங்களுக்கு,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வரும் நிலையில்,  கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்பது உண்மை என்றாலும்,  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிகை 50 சதவிகிதத்தை கடந்துள்ளதாக வெளியான தகவல்  அந்தந்த மாநில அரசுகளை திருப்தி அடையச் செய்துள்ளது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளதாக  தெரிய வந்துள்ளது மத்திய பிரதேசத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51 சதகிதமாகவும், ராஜஸ்தானில் 54 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தச் சதவிகிதம் உத்தர பிரதேசத்தில் அதிகரித்து, 56 சதவிகிதமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி குணமடைந்தவர்களின் சதவிகிதம் 42 சதவிகிதமாக உள்ளது.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் நகரங்களில் முறையே மீட்பு விகிதம் 65 சதவீதம் மற்றும் 69 சதவீதம் எனவும், மத்திய பிரதேசத்தின் இந்தூர் 47 சதவீதமாகவும், போபாலில் மீட்பு விகிதம் 63 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. உத்தரபிரதேசத்தின்  ஆக்ராவில், 85 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நொய்டா மற்றும் மீரட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 66 சதவீதமாக பதிவாகியுள்ளது.

30 சதவிகிதத்திற்கும் குறைவான குணமடைந்தவர்களின் விகிதத்தைக் கொண்ட மகாராஷ்டிரா இந்த மூன்று மாநிலங்களின் கட்டுப்பாடு மற்றும் மருத்துவ சிகிச்சை உத்திகளை நெருக்கமாகப் பின்பற்றி வருகிறாது என்பது குறிப்பிடத்தக்கது.