மே தின போராட்டம்: ஏன் ஜார்க்கண்ட் MGNREGA தொழிலாளர்கள் மோடிக்கு ரூ 5 திருப்பிக் கொண்டிருக்கின்றனர்
இந்த ஆண்டு ஏப்ரலில், மத்திய அரசு MGNREGA ஊதியத்தை பல மாநிலங்களில் திருத்தி அமைத்தது, அவற்றுள் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், முறையே ரூ 2 மற்றும் ரூ 3 உயர்வைப் பெற்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ 162லிருந்து ரூ 167 ஆக உயர்த்தப்பட்டது.
ஜார்க்கண்ட், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலம். அங்கு வெறும் ₹ 5 உயர்த்தியுள்ளது அம்மாநில உழைபாளிகளை விரதியுறச் செய்தது. தங்கள் ஏமாற்றத்தினை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் ஒன்றாம் தேதியன்று , மே தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ரூ.5 திரும்ப தர முடிவு செய்தனர்.
“எங்களை விட உங்களுக்குத் தான் இந்த கூடுதல் ஐந்து ரூபாய் தேவைப்படும் என்று எண்ணுகிறோம், ஏனெனில் உங்கள் அரசாங்கத்திற்கு பல செலவுகள் உண்டு” என்று மானிகாவிலுள்ள (லதேஹார், ஜார்க்கண்ட்) MGNREGA தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் அனுப்பிய கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கை கிராமீன் ஸ்வராஜ் மஸ்தூர் சங்கம் என்கிற கிராமப்புற தொழிலாளர்களின் ஒரு உள்ளூர் அமைப்பின் மூலம் தொடங்கப்பட்டது.
மற்ற நடவடிக்கைகள் மத்தியில், சங்கத்தின் உறுப்பினர்கள் NREGAயின் கீழ், வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் மற்றும் 15 நாட்களுக்குள் சம்பளம் உட்பட தமது மற்ற உரிமைகளைப் பாதுகாக்க போராடி வருகின்றனர். எனினும், ஜார்க்கண்டில் ஊதியம் குறைவாக இருப்பதால் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு வேலையில் ஆர்வம் தேய்ந்து வருகிறது. ஜார்க்கண்ட்டில் நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ 212 ஆகும்,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.