சென்னை: ஜார்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த அம்மாநில மாவோயிஸ்ட் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு பல்வேறு குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருந்த அவர்மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்,அவர் திடீரென தலைமறைவான நிலையில், அவரை நாடு முழுவதம்  ஜார்க்கண்ட் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில்,  மாவோயிஸ்ட் சுகார் கஞ்ச்   சென்னை எண்ணூர் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து செய்து கொண்டிருப்பதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில்,  உதவி ஆணையர் பிரம்மானந்தம் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  சுகார் கஞ்ச்  எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் நடைபெற்று வரும் எண்ணூர் தெர்மல் அனல் மின் நிலைய அருகே கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், சுகார் கஞ்ச்-ஐ கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்   “சுக்கர் கஞ்ச் (வயது 31) (மவோயிஸ்ட் தீபக் காம்ரேட் அணியை சேர்ந்தவர்), த/பெ.கமல் கஞ்சு, பூச்சாட்திக் கிராமம், கேராதாரி போஸ்ட், அசாரிபாக் மாவட்டம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் எண்ணூர் அனல் மின் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் சுரேஷ் என்பவரிடம்  காண்டிராக்டில் கடந்த 9 மாதமாக தங்கி இங்கு சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளது தெரிய வந்தது. இவர்  தனது மனைவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணின் டவர் லோக்கேஷன் மூலம் அறிந்த ஜார்க்கண்ட் மாநில போலீசார் சென்னை மாநகர காவல் ஆணையளார் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எண்ணூர் AC Spl Team SI நந்தகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் 26.10.2021 ம் தேதி 18, 30 மணிக்கு மேற்படி நபரை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில். அவர் மீது ஜார்கண்ட் மாநிலம் பல வழக்கில் தேடப்பட்டு வருவதும், கஞ்ச் மது செக்சன் 302 கொலை வழக்கு 2, 2) 307 கொலை முயற்சி 3 வழக்கும், 3) வெடி குண்டு வீசியது தொடர்பான வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. அவரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.