ராஞ்சி:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில்,  அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ள ஜார்கண்ட் மாநில அரசு, முகமூடி அணியாவிட்டால் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதை தடுக்க அனைவரும் முகக்கவசம்,  சமுக விலகல்,  பொது இடங்களில் துப்புவதை தவிர்ப்பது உள்பட பல்வேறு விதிகள் உருவாக்கப்பட்டு, கட்டாய நடை முறைப்படுத்தபபட்டு வருகின்றன.
விதிகளை மீறுபவர்களுக்கு ஒவ்வொரு மாநிலஅரசும், ரூ.100 முதல் 1000 வரை அபராதம் விதித்து வருகின்றன.
இந்த நிலையில்,  ஜார்க்கண்ட் அரசு (Jharkhand Government), அபராதம் விவகாரத்தில் அதிரடி காட்டி உள்ளது. கோவிட் -19 விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களை உருவாக்கியுள்ளது.
அதன்படி, மாநிலத்தில் கோவிட்19 விதிகளை மீறினால்  1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவித்து உள்ளது.
இந்த தொற்று நோய் சட்டத்துக்கு ஜார்க்கண்ட் அமைச்சரவை (Jharkhand Cabinet) நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த சட்டத்தில், கோவிட் -19 இன் தடை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு எதிராக ரூ .1 லட்சம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள், பொதுஇடங்களில் எச்சில் துப்புபவர்கள், சமூக விலகளை கடைபிடிக்காதவர்கள் போன்றவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.