சென்னையில் இன்று ஒரேநாளில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Must read

சென்னை:
சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 11 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.  இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 90,900பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை  75,384 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,569  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 1947 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இந்த  சென்னையில் இன்று ஒரே நாளில்  மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை  சுமார் 16 மணி நேரத்தில்,  ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமனையில் -4 பேரும், ஓமந்தூரார்  அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவரும், கே.எம்.சியில் 2 பேரும்,   தனியார் மருத்தவமனையில் ஒருவர் என  மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

More articles

Latest article