டெல்லி
இன்று பிரதமர் மோடியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார்.
.
ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராகவும் அம்மாநில முதல்வ்ராகவும் பதவி வகித்து வருகிறார். அவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஏற்கனவே அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததால். சம்பாய் சோரன் முதல்வரானார். ஹேமந்த் சோரன் மார் 5 மாதங்கள் சிறையில் இருந்த பிற்கு கடந்த மாதம் 28-ம்தேதி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதால் மீண்டும் அம்மாநில முதல்வராக பதிவியேற்றார்.
நேற்று முன்தினம் முதல்வராக பதிவியேற்ற பிறகு டெல்லி சென்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் ஹேமந்த் சோரனும் அவரது மனைவியும் சந்தித்தனர்
இன்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, ஜார்க்கண்ட் மாநில பிரச்சினைகள் குறித்தும் மத்திய நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராகக மீண்டும் பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியை முதல் முறையாக சந்தித்துள்ளார்.