ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ்,  பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

டில்லி

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளன.

பாஜக ஆட்சி செய்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.  இதையொட்டி ஜார்காண்ட் மாநிலத்தில் இந்த மாதம் 30 ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.   ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சி வெளியிட்டுள்ளது.   இந்த முதல் பட்டியலில் 5 பேர் பெயர் இடம் பெற்றுள்ளது.   லோகாடர்கா சட்டப்பேரவை தொகுதியில் அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமேஸ்வர் ஒரியன் போட்டியிட உள்ளார்.  விரைவில் அடுத்த பட்டியல் வெளியாக உள்ளது.

பாஜகவும் தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 52 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் ஜம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியிலும், மாநில பாஜக தலைவர் லட்சுமண் கிலுவா சக்ரதார்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

More articles

Latest article