ஜெயலலிதா இல்லத்தை நினைவு இ ல்லமாக மாற்ற வேண்டும் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
மேலும், சசிகலாவை ஜெயலலிதா, அதிமுக கவுன்சிலர் கூட ஆக்க எண்ணியது கிடையாது என்று கூறினார்.
பதவி ஆசையால்தான் சசிகலா ஜெயலலிதாவுடன் இருந்துள்ளார் என்பது தற்போது தெரிய வருகிறது என்று கூறினார்.
ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் எல்லாம் தலைமைக்கு வர வேண்டும் என்றால், அவருடன் 13 வயது முதலே, அதாவது அவரது அம்மா சந்தியா இருக்கும்போதே ஜெயலலிதா வீட்டில் வசித்து வருபவர் ராஜம் என்பவர். அவர்தான் அவருக்கு உணவு வழங்கி வந்தார் என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அதில் அவர் உபயோகப்படுத்திய கார், பரிசு பொருட்கள், விருதுகள் அனைத்தும் புரட்சி தலைவி அம்மாவின் நினைவாக அங்கே வைக்க வேண்டும். இதுதான் ஜெயலலிதாவின் எண்ணம் மற்றும் தமிழக மக்களின் ஆசையும் ஆகும் என்றார்.