டில்லி,

றைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்  அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து பாராளுமன்ற மேலவையில் விவாதிக்க கோரி அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த பாராளுமன்ற எம்.பி.யான மைத்ரேயன் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு மேலவை தலைவர் அன்சாரியிடம் விதி 67ன் கீழ் நோட்டீஸ் கொடுத்து உள்ளார்.

நாளை தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி  ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இதற்கிடையில் ஜெ. மரணம் குறித்து, தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட் எய்ம்ஸ் அறிக்கையிலும், அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையிலும் பல குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகி உள்ளது.

இந் நிலையில் ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரியிடம் ஓபிஎஸ் அணியின் எம்.பி. மைத்ரேயன் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஒத்திவைப்பு தீர்மானம் இன்னும் இரண்டு நாளில் தொடங்க இருக்கும்  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது பகுதியில் விசாரிக்கப்படும் என தெரிகிறது.

ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் 12 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது