அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இருந்து நியூயார்க் செல்ல இருந்த யூனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் தீ பிடித்தது.

ஹூஸ்டனில் உள்ள புஷ் விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட தயாரான இந்த விமானத்தின் இறக்கை பகுதியில் புகை வெளியானது.

இதனை தொடர்ந்து பயணிகள் அலறியடித்து வெளியேற தவித்ததை அடுத்து ஸ்லைடிங் கதவு மற்றும் நகரும் ஏணிகள் வழியாக பலரும் கீழே இறங்கினர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். விமானத்தின் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே புகை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி. நகரில் தரையிறங்க வந்த ஜெட் விமானத்துடன் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் 67 உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.