அமராவதி:

ந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது குடியிருந்து வரும் வாடகை வீட்டை இடிக்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதையடுத்து, புதிய வீடு தேடுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

சந்திரபாபு நாயுடு – ஜெகன்மோகன் ரெட்டி

சந்திரபாபு நாயுடுவுக்கு சொந்த பிரஜா வேதிகா சொகுசு பங்களா கிருஷ்ணா நதிக்கரையில் லிங்கமனானாணி எஸ்டேட் பகுதியில்  அரசு விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி, ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் இடித்து தள்ளியது. சுமார் 8 கோடி மதிப்பிலான அந்த வீட்டு உடைத்து தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், அதே பகுதியில் தற்போது சந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் வாடகை வீட்டையும் இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி  வருகிறது.

சந்திரபாபு நாயுடுவின்  பிரஜா வேதிகா கட்டிடம் கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் இருப்பதாக கூறி கடந்த 25ம் தேதி இரவு  இடித்து தரைமட்டமாக்கியது. இந்த நிலையில், தற்போது இருக்கும் வாடகை வீடும் கிருஷ்ணா நதிக்கரையையொட்டி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாகவும், இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  60 முதல் 70 கட்டிங்கள் இடிக்கப்படும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அடுத்த 7 நாட்களுக்குள் கட்டிடங்களை காலி செய்யும்படி கூறி உள்ளது.

1884 ஆம் ஆண்டு நதி பாதுகாப்புச் சட்டத்தின் விதிமுறைகளின்படி,(River Conservancy Act, 1884)  கிருஷ்ணா ஆற்றின் கரையோரம், 500 மீட்டருக்குள் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக் கூடாது. ஆனால், கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் சந்திரபாபு நாயுடுவின் பிரஜா வேதிகா உள்பட  28 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணா  நதிக்கரை ஓரத்தில் 100 மீட்டர் தாண்டிய நிலையில் சந்திரபாபு நாயுடுவின் வீடு உள்பட பல கட்டிங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விதிகளை மீறி கிருஷ்ணா நதிக்கரையோரம் ஆக்கிர மிப்பு செய்து கட்டப்பட்டு உள்ள அனைத்து கட்டிடங்களையும் இடிக்க  அந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் பல திட்டங்களை மாற்றி வருகிறார்.  சந்திர பாபு நாயுடுக்கான பாதுகாப்பை முதலில் வாபஸ் பெற்ற ஜெகன், தொடர்ந்து, நாயுடுவின்  வீட்டை இடித்து தரைமட்டமாக்கினார். தொடர்ந்து, அவர் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டையும் உடைக்கப்போவதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சந்திரபாபு நாயுடுவை குறி வைத்து ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசின் நோட்டீஸ் காரணமாக  விஜயவாடா அல்லது குண்டூரில் வாடகைக்கு புதிய வீடு தேடுவ தில் சந்திரபாபுநாயுடு குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருவதாகவும்,  வீடு தேடும் பணியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும்  ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.