பாட்னா

பீகாரில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஐக்கிய ஜனதா தளம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம்  பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசு அம்மாநிலத்தில் நடந்த சாதிவாரி கணக்கெடுப்புக்களை வெளியிட்டது.  இது அம்மாநிலத்தில் வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது என்பதால் பலரும் இதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

நேற்று செய்தியாளர்களிடம் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன்,

“முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தும் பாஜக வின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான புதிய வழிகள் திறக்கும். 

இவ்வாறு அவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிவது, சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதற்கும், அந்த பகுதியை அவர்கள் வெற்றிகரமாக அடைவதை உறுதி செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்”

என்று பீகார் அரசைப் பாராட்டி உள்ளார்.

[youtube-feed feed=1]