ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆதரவு: கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவிப்பு

Must read

பெங்களூரு:

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த தமது கட்சி முடிவு செய்து இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.


இது குறித்து என்டிடிவி அவர் அளித்த பேட்டியில், எங்கள் தலைவர் தேவேகவுடா, எங்கள் கட்சினர், நான் என எல்லோருமே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஆதரவு தெரிவிப்போம்.

மம்தா பானர்ஜி எளிமையிலும் எளிமையானவர். சிறந்த நிர்வாகி. அவருக்கும் நாட்டை வழி நடத்தக் கூடிய தகுதி உண்டு.
ராகுல் காந்தி பக்குவப்பட்ட அரசியல்வாதி. மோடியை எதிர்கொள்வதற்கான போதிய பலம் அவரிடம் உள்ளது.
மோடி காகிதப் புலிதான். அவர் நன்றாகப் பேசுகிறார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் என்ன சாதித்துவிட்டார்? என கேள்வி எழுப்பினார்.

More articles

Latest article