பெங்களூரு

ர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் ஒன்றிணைந்தால் அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலை உண்டாகி உள்ளது.  அதை ஒட்டி இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளன.

ம ஜ த தலைவரான குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளிக்க காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது.   அதை ஒட்டி கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான பரமேஸ்வரா வுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க ம ஜ த கட்சி ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.