ஆ.சகாயராஜா, அஇஅதிமுக தொழில்நுட்பபிரிவு உறுப்பினர், பரமக்குடி.
கடந்த 27-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை “புதிய தலைமுறை “தொலைக்காட்சியில்,” புதுப் புது அர்த்தங்கள் “நிகழ்ச்சி பார்த்தேன். அரியானா மாநிலத்தில் சாமியார் குரமீத் ராம் ரஹிம் சிங்” மீதான தண்டனையும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் குறித்தும் விவாதம் நடந்தது.
அப்போது, பா.ஜ.க.வைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர், மகா பெரியவர் சங்கராச்சாரியார் பற்றிய சில கருத்துக்களைக் கூறினார். அப்போது, ஊடகவியலாளர் ஞானி, ” சரியான சிஷ்யனை அவர் தேர்ந்தெடுக்க வில்லை” என்று பதிலுரைத்தார்.
அதற்கு பாஜக ராமசுப்பிரமணியன், ” ஜெயேந்திரர் மீது பொய் வழக்குகள் போட்டதற்கான தண்டனையை, வழக்குப் போட்டவர் அடைந்து விட்டார்” என்றார்.
அதாவது ஜெயேந்திரரை கைது செய்த அப்போதைய முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மரணம் பற்றிய கருத்தை, பாஜக ராமசுப்பிரமணியன் பதிவு செய்தார்.
இதுதான் ஜெ மரணம் பற்றி பாஜக வின் கருத்து என்றால், பிறகு ஏன் ஜெயலலிதா பெயரைச் சொல்லி பெயரைச்சொல்லி அஇஅதிமுக வுடன் கூட்டணி பேசுகிறார்கள்? அக்கட்சி பஞ்சாயத்தை நடத்தி வைக்கிறார்கள்?
இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஜெயேந்திர சரசுவதி என்ற பெயரில் இருந்த, கும்பகோணம் சுப்பிரமணியை கைது செய்ததற்காக, ஜெயலலிதா தண்டனையாக ” மரணத்தை சந்தித்தார்” என்பதுதான் பாஜகவின் கருத்தா?
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிசன் அமைத்து ஆராயப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் மரணத்திற்குப் பின்னால், அந்த மடமும், அதன் சாமியார்களும் இருக்கிறார்கள் என்ற , “வாக்கு மூலத்தை” பாஜக ராமசுப்பிரமணியன் கொடுத்துள்ளார். இது குறித்தும் கமிசன் விசாரிக்க வேண்டும்.
ஆனால் பாஜகவின் அடிமையான இந்த தமிழக அதிமுக அரசு இதைச் செய்யுமா?