சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’, ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கே சொந்தம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தமிழகஅரசின் அரசாணயை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக தமிழகஅரசு மாற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, அவரது வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைநீதிபதி என்.சேஷசாயி முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மதியம் நீதிபதி என்.சேஷசாயி பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார்.
போயஸ்கார்டன் வேதா இல்லம் அரசுடமை ஆக்கி அறிவிக்கப்பட்ட தமிழகஅரசின் அரசாணை செல்லாது என்று அந்த ஆணையை ரத்து செய்ததுடன், வேதா இல்லம், அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் மற்றும் தீபாவுக்கே சொந்தம் என தீர்ப்பளித்து உள்ளார்.
மேலும் வேதா இல்லத்தின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுடன், அதற்காக தமிழகஅரசு செலுத்திய ரூ.67.9 கோடி பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளது.
இதற்கு ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர்களின் வாரிசான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அவர்கள், ஜெயலலிதா சொத்தை அரசுடமையாக்குவதற்காக ரூ செய்யப்பட்டு இருந்தது.