டில்லி:

ன்று காலை பாஜகவில் இணைந்த முன்னாள் நடிகை மற்றும் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு உடனே பாஜக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இன்று 29 வேட்பாளர்களை கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில், மத்திய அமைச்சர் மேனகா காந்தி உள்பட ஜெயப்பிரதாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுடன் சேர்ந்து உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் போட்டியிட உள்ள  அறிவித்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். மேனகா காந்தி சுல்தான்பூரிலும், வருண் காந்தி பிலிபித் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்காளத்தின் அல்பேரியா தொகுதியில் நடிகர் ஜாய் பானர்ஜி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.