ஜெயலலிதா சிலை ( பெரம்பலூர் – சென்னை)

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எழுபதாவது பிறந்தநாளை இன்று ஆளும் அ.தி.மு.க. பிரம்மாண்டமாக கொண்டியது. இதன் ஒரு பகுதியாக  சென்னையில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.

ஆனால் சிலையின் சாயல் ஜெயலலிதா போல இல்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் அமைச்சர் வளர்மதி போல இருக்கிறது என்றும், நடிகை காந்திமதி போல இருக்கிறது என்றும் பல்வேறுவிதமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கேரளாவில்..

இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஜெயலலிதாவின் சிலையை விமர்சிப்பவர்கள் அவரது விசுவாசிகள் அல்ல” என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இதற்கிடையே, “பெரம்பலூரில்  திறக்கப்பட்ட ஜெயலலிதா சிலை மிகச் சிறப்பாக அச்சு அசலாக அவரைப்போலவே இருக்கிறது. அதைச் செய்த சிற்பியையே சென்னையலும் சிலையை உருவாக்கச் சொல்லியிருக்கலாம்” என்ற விமர்சனம்  அ.தி.மு.க.வினரிடையே எழுந்திருக்கிறது.

ஆந்திராவில்..

இந்த சிலை கடந்த ( 2017) ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டது. அம்மாவட்ட மாவட்ட அதிமுக சார்பில் இச்சிலை அமைக்கப்பட்டது.

அதே போல கேரளா மற்றும் ஆந்திராவில் கடந்த வருடம் வைக்கப்பட்ட சிலைகளும் சிறப்பாக உள்ளன.

“மாவட்ட கழகம் சார்பில் அமைக்கப்பட்ட சிலையும், வெளி மாநிலங்களில் வைக்கப்பட்ட சிலைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டபோது, கட்சியின் தலைமையகத்தில் வைக்கப்பட்ட சிலையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா” என்ற விமர்சனமும் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.