சென்னை:

ஜெ.வின் கனவு திட்டமான ‘சிற்றுந்து சேவை’யை, தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் எடப்பாடி அரசு முடக்கி வருகிறது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டங்களில் ஒன்று சிற்றுந்து சேவை திட்டம். இத்திட்டத்தின்படி  மலைப்பிரதேசங்கள், நகரங்கள், கிராமங்களின் உற்புற பகுதி மக்களும் பயன்பெறும் வகையில், சிற்றுந்து சேவை சில ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப் பட்டது.

முதல் கட்டமாக சென்னை போன்ற  பெருநகரத்தில்  பல்வேறு வழித்தடங்களில் பொது மக்களுக்கு மிகவும் பயன் கொடுத்துக்கொண்டிருந்தன. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல பகுதி களில் சிற்றுந்து சேவை படிப்படியாக நடைமுறை படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தற்போது எடப்பாடி அரசு சிற்றுந்து சேவைகளை படிப்படியாக குறைத்து வருகிறது. தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 200 சிற்றுந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 சிற்றுந்துகளே இயக்கப்பட்டு வருவதாக கூறப்படு கிறது.

ஜெ.வின் கனவுத் திட்டமான சிற்றுந்து சேவை மீண்டும் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும், சிற்றுந்தூ சேவை தொடர வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.