ஜெயலலிதாவின் ‘மகன்’ வழக்கு: மனுதாரருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை!

சென்னை,

றைந்த ஜெயலலிதாவின் மகன் நான்தான்  என அறிவிக்க கோரி இளைஞர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்துள்ள மனுவில், தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த  ஜெயலலிதாவுக்கும்,  நடிகர் சோபன் பாபுவுக்கும் பிறந்த மகன்தான் என்றும், எனது பெயர் என்றும் கூறி கிருஷ்ணமூர்த்தி என்றும், ஆகவே, எனது தாய் ஜெயலலிதா என்று அறிவிக்க கோரியும்,

ஜெயலலிதாவின் மகன் என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதாவை சசிகலா கொலை செய்ததாகவும், அவர்களிடம் தனக்கு உயிர்பாதுகாப்பு வேண்டும் என்றும் கோரியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் வாரிசுக்கு சேர வேண்டிய சொத்துக்களை முறைப்படி தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சியடைந்து போலீசாரை கடிந்து கொண்டார்.

இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என தெளிவாக தெரிவதாக கூறிய நீதிபதி, கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து ஆவணங்களையும் முறையாக ஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும், நீதிமன்றத்தை வீண்டித்ததற்காக சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்றும் கிருஷ்ணமூர்த்திக்கு நீதிபதி மகாதேவன் எச்சரித்தார்


English Summary
Judge Mahadevan warning to the Petitioner Krishnamurti, who's asking Jeyalalitha's son