சென்னை,
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை, ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளி என்பதால், போயஸ் தோட்ட இல்லமும் பறிமுதல் செய்யப்பட வேண்டியது என்றும், இதன் காரணமாக வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றக்கூடாது என்பது எதிர்ப்பு தெரிவித்து முசிறியைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான வேதா இல்லம் சொத்துக்குவிப்பு வழக்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என தமிழக அரசு தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமைக்குள் இது தொடர்பான விளக்கத்தை தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.