
சென்னை :
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. விசாரணை வெளிப்படையாக இருக்குமா என்பதை பற்றி கவலைப்படத்தேவையில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Patrikai.com official YouTube Channel