சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு ஒத்தி வைத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்துள்ள நிலையில், வழக்கறிஞர்கள்ஜோ சப், ஞானசேகரன், ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை  ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  விசாரணை நடத்த வேண்டும் என மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதுபோன்ற ஒரு வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டிலும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், அது தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி செல்வவிநாயகம் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.