ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளது: வெங்கையா நாயுடு

Must read

ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உளளது என்று  மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கையா நாயுடு, “ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிப்பது தவறு.  அவருக்கு லண்டன் டாக்டர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சையளித்துள்ளனர்.   சிகிச்சை பலனின்றியே அவர் மரணமடைந்தார்.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக யாராவது கூறினால் அதற்கான உறுதியான ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும்.  அப்படி வெளியிட்டால் சம்மந்தப்பட்டவர்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், , “ஜெயலலிதா  ஆளுமை கொண்ட தலைவராக விளங்கினார். ஆகவே அவர் மட்டுமே தமிழக அரசியலில் ஜொலித்தார். தற்போது  இல்லாத தமிழக அரசியலில் பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனென்றால், ஜெயலலிதாவின் ஆளுமை காரணமாக, பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பியவர்கள்கூட அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். அதிமுக ஒரு தேசிய கட்சியாக விளங்கியதும் இதற்கு ஒரு காரணம்.

அதே நேரம் ஜெயலலிதா மறைந்துவிட்ட சூழலில் தமிழக அரசியலில் செல்வாக்கு பெரும் வாய்ப்பு பாஜகவுக்கு பிரகாசமாக உள்ளது ” என்று  வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

More articles

Latest article