சென்னை,
அதிமுகவின் முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவருமான பிஎச். பாண்டியன், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தலைவர் மனோஜ்பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் இன்று பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது.
மறைந்த முன்னாள் முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியிடப்பட வேண்டும்.
அங்கிருந்த 27 சிசிடிவி காமிராக்களை அகற்றச் சொன்னது யார்?
ஜெயலலிதா கீழே தள்ளி விடப்பட்டார் என்று ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் கீழே தள்ளி விட்டனர் என்றும் அவர் காயமடைந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறினார்.
போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் உயிர் போகும் தருவாயில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என்றும் பி.ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பினார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் கேட்டார்.
2016 மே, ஜூன் மாதத்தில், சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சேர்க்க வசதியாக, சென்னைக்கு பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பியதாக மத்திய அரசின் ரகசிய தகவல் கூறுகிறது. அந்த முயற்சியை தடுத்தது யார்?.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் அறிக்கையை இன்னும் வெளியிடாதது ஏன்?
என்எஸ்ஜி பாதுகாப்பு உள்ள ஜெயலலிதாவுக்கு அதை அகற்றியது யார்?
கடந்த டிசம்பர் 4ந்தேதி ஜெயலலிதா இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 5ந்தேதி இரவுதான் அறிவிக்கப்பட்டது. இதற்கு என்ன யார் காரணம்?
தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் அதிமுக தேர்தல் ஆணையத்திற்கு அளித்த அனுமதி கடிதத்தில், மருத்துவமனையில் இருந்த அவரது கையொப்பம் பெறப்பட்டது. அப்போது வேறு எதற்கெல்லாம் கையெழுத்து பெறப்பட்டது.
கையெழுத்து வாங்கியவர் யார்? அவரை விசாரித்தால்தான் விவரம் தெரியவரும் என்றும் கூறி உள்ளனர்.
மேலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விரிவாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
தொடர்ந்து மனோஜ் பாண்டியன் கூறியதாவது,
ஜெயலலிதாவுக்கு இகோமோ உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் அளிக்க அனுமதி அளித்தது யார் என்று கேள்வி எழுப்பினார்.
இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் உணவு வகைகளை ஆய்வு கூட பரிசோதனைக்கு பிறகே தர வேண்டும். எனவே, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளின் ஆய்வு கூட பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நவ.2 முதல், டிச., 5 வரை வெளிநாட்டு டாக்டர்கள், உள்நாட்டு டாக்டர்கள் யாரும் ஜெ.,வை சந்திக்க வராதது ஏன்?
அவரது கன்னத்தில் நான்கு ஓட்டைகள் ஏற்பட்டது எப்படி?
இதற்கெல்லாம் விளக்கம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.