சென்னை,

மிழக சட்டப்பேரவையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் ஆரம்பமானது. அதைத்தொடந்து ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை,  ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்ட மசோதா தாக்கல் செய்வதற்காக வசதியாக மீண்டும் மாலை 5 மணிக்கு கூடியது.

இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு அவசர மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று 2வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆரம்பமானது.

சட்டப்பேரவை கூட்டம்  தொடங்கியதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். தொடர்ந்து  தமிழக முன்னாள் ஆளுநர் பர்னாலா, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி உள்ளிட்ட ஆறு பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

மேலும் , பாலமுரளி கிருஷ்ணா, சோ, பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசி வருகிறார்கள்.